40 ஆண்டு பாராளுமன்ற அரசியல் பிரவேசம் நிறைவையொட்டி வரவேற்பு நிகழ்வுஒன்றுக்காக ஐக்கிய தேசிய கட்சியின் தலைவரும், பிரதமருமான ரணில் விக்ரமசிங்க இன்று ஹட்டன் நகருக்கு விஜயம் செய்தார்.
பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் 40 ஆண்டு பாராளுமன்ற அரசியல் பிரவேசம் நிறைவையொட்டி ஐக்கிய தேசிய கட்சியின் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கே.கே.பியதாஸவின் எற்பாட்டில் இந்த வரவேற்பு நிகழ்வு இடம்பெற்றது.
ஆரம்ப நிகழ்வாக ஹட்டன் ஸ்ரீ மாணிக்கப் பிள்ளையார் ஆலயத்திலும், நீக்ரோதாரராம பௌத்த விகாரையிலும், ஹட்டன் ஜும்மா பள்ளிவாசலிலும் இடம்பெற்ற விசேட பூஜைகளில் கலந்து கொண்டு வழிபாடுகளில் ஈடுபட்டார்.
அத்தோடு ஹட்டன் டிப்போவினால் புதிதாக ஆரம்பிக்கப்படவுள்ள ஹட்டனிலிருந்து மட்டகளப்புவிற்கான பஸ் சேவையையும் பிரதமர் ஆரம்பித்து வைத்தார்.
அதன்பின் மக்களை சந்திக்கும் முகமாக டீ.கே.டபிள்யூ கலாசார மண்டபத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பு கூட்டத்திலும் கலந்து கொண்டார்.