மைதானத்தை சுத்தம் செய்த இந்திய வீரர்கள்
இந்திய கிரிக்கெட் வீரர்கள் கொல்கத்தாவில் உள்ள ஈடன்கார்டன் மைதானத்தை சுத்தம் செய்துள்ளனர்.
பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் தூய்மை இந்தியா என்ற திட்டத்தை துவக்கி வைத்தார்.
இதில் பல்லாராயிரக்கணக்கான மாணவர்கள், பொதுமக்கள் மற்றும் முக்கிய பிரபலங்கள் என அனைவரும் இத்திட்டத்தில் சேர்ந்தனர்.
அதன் படி காந்தி ஜெயந்தியான நேற்று தூய்மை இந்தியா என்ற திட்டத்தின் கீழ் இந்திய வீரர்கள் அனைவரும் கொல்கத்தா ஈடன்கார்டன் மைதானத்தில் ரசிகர்கள் அமர்ந்திருக்கும் இருக்கையில் இருந்த குப்பைகள் மற்றும் மைதானத்தில் இருந்த குப்பைகள் என அனைத்தையும் தங்கள் கைகலால் எடுத்து சுத்தம் செய்தனர்.
Team India joins Swachh Bharat Missionhttp://www.bcci.tv/videos/id/2722/team-india-joins-swachh-bharat-mission … #BCCI #INDvsNZ
இது குறித்து டெஸ்ட் அணியின் தலைவர் கோஹ்லி கூறுகையில், இது ஒரு சிறப்பான திட்டம். இத்திட்டத்தில் இளைஞர்கள் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும். இந்தியாவை சுத்தம் செய்ய வேண்டும். நாம் செய்யும் இந்த செயலால் மற்றவர்களும் இத்திட்டத்தில் சேர்வதற்கு தூண்டுதலாக இருக்கும் என கூறியுள்ளார்.
இதில் இந்திய வீரர் ரோகித் சர்மா, ரகானே, பயிற்சியாளர் கும்ளே, பி.சி.சி.ஐ தலைவர் அனுராக் தாகூர் மற்றும் சில இந்திய வீரர்களும் இதில் கலந்து கொண்டனர்.