மேற்கு ரொரன்ரோவிற்கு மேலும் GO ரயில் நிலையங்கள்
மெட்ரோலிங்ஸ் பிராந்திய எக்ஸ்பிரஸ் ரயில் திட்டத்தின் ஒரு அங்கமாக ரொரன்ரோவின் மேற்கு பகுதியில் புதிதாக நான்கு பிராந்திய பொது போக்குவரத்து அமைப்பான புழு ரயில் நிலையங்கள் அமைக்கப்படவுள்ளன.
22 நிறுத்தங்களைக் கொண்ட, 53 கிலோமீற்றர் நீளமான ரயில் சேவையை நடைமுறைப்படுத்தப் போவதாக ரொரன்ரோ மேயர் ஜோன் ரோறி ஏற்கனவே குறிப்பிட்டிருந்தார்.
எனினும் கடந்த மார்ச் மாத்ததில் அதில் மாற்றங்களை அறிவித்த மேயர், ஆறிலிருந்து எட்டு வரையான புழு நிலையங்களும், எக்ளிங்டன் மேற்கு இலகு ரயில் திட்டத்தின் ஒரு பகுதியாக எட்டிலிருந்து 12 ரயில் நிலையங்களும் அமைக்கப்படும் எனத் தெரிவித்தார்.
இவ்வாறான நிலையில், இந்த புதிய நான்கு நிலையங்கள் அமைக்கப்படவுள்ள அறிவிப்பானது, ரொரன்ரோ மேயரின் திட்டங்கள் செயலாக்கம் பெறுவதனை உறுதிப்படுத்துவதாக அமைந்துள்ளதாகக் கூறப்படுகிறது.
மேலும், ரொரன்ரோவின் கிழக்கு பகுதியில் புதிதாக மேலும நான்கு நிலையங்கள் அமைக்கப்படவுள்ளமை குறித்த அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.