பெண்ணிற்கு முத்தம் கொடுத்த அகதி: 1.30 லட்ச ரூபாய் அபராதம் விதித்த நீதிமன்றம்
சுவிட்சர்லாந்து நாட்டில் பெண் ஒருவரின் விருப்பமின்றி முத்தமிட்ட அகதிக்கு அந்நாட்டு நீதிமன்றம் 1.30 லட்ச ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பளித்துள்ளது.
சுவிஸின் ஆர்கவ் மாகாணத்தில் உள்ள Aarau என்ற நகரில் தான் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.
கடந்த ஜனவரி மாதம் ஆரவ் நகரில் உள்ள ரயில் நிலையம் ஒன்றிற்கு இரண்டு புலம்பெயர்ந்தவர்கள் சென்றுள்ளனர்.
அப்போது, அங்கிருந்த இரண்டு பெண்களிடம் இவர்கள் அநாகரீகமாக நடந்துள்ளனர். இருவரில் ஒருவர் பெண்ணின் கன்னத்தில் திடீரென முத்தமிட்டுள்ளார்.
இதனைக் கண்டு ஆத்திரம் அடைந்த அந்த பெண் உள்ளூர் பொலிசாரிடம் புகார் அளித்துள்ளார்.புகார் பெற்று விசாரணை நடத்திய பொலிசார் நபரை நீதிமன்றத்தில் நிறுத்தியுள்ளனர்.
நபர் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டதை தொடர்ந்து, அவருக்கு நீதிமன்றம் 900 பிராங்க்(1,38,062 இலங்கை ரூபாய்) அபராதம் விதித்தது.
எனினும், நீதிமன்றம் விதித்த அபராத தொகையை அவர் செலுத்த இயலாது என மறுத்துவிட்டதால், அவருக்கு 9 நாட்கள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.