இந்தியக் கிரிக்கெட் அணியின் தலைவர் விராட் கோஹ்லி, தனது மகனுக்கு டெஸ்ட் போட்டிக்கான ரீ-சேட் ஒன்றை பரிசளித்தாக அவுஸ்ரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் பிரெட் லீ கூறியுள்ளார்.
தமிழ்நாடு பிரிமீயர் லீக் தொடரில் கிரிக்கெட் வர்ணனையாளராக செயல்பட்டு வரும் பிரெட் லீ, இதுகுறித்து மேலும் கூறுகையில், ”என்னுடைய 10 வயது மகனின் பிடித்த துடுப்பாட்டவீரர் விராட் கோஹ்லிதான். ஒருமுறை விராட் கோஹ்லி என்னை கடந்து செல்லும்போது, அவருடன் நான் கைக்குலுக்கிக் கொண்டேன்.
அப்போது விராட் கோஹ்லியிடம், என்னுடைய மகனின் பிடித்த துடுப்பாட்டவீரர் நீங்கள்தான் என்று கூறினேன். உடனே, கோஹ்லி தனது டெஸ்ட் போட்டிக்கான ரீ-சேட்டில் கையெழுத்திட்டு என் மகனுக்கு வழங்கி வாழ்த்தினார்” என கூறினார்.