வர்த்தக உடன்படிக்கை எதுவும் இன்றி ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா விலகுவது தொடர்பில் தொழிற்கட்சித் தலைவர் ஜெரமி கோர்பின் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், உலகளாவிய வர்த்தக அமைப்பின் விதிகளை கன்சர்வேட்டிவ் அரசாங்கம் மீள்பரிசிலனை செய்யக்கூடும் என்று குறிப்பிட்டுள்ளார். மேலும், பிரெக்சிற் பேச்சுவார்த்தைகளின் போது ஐரோப்பாவுடனான சுங்கவரி இல்லாத வர்த்தகம் தொடர்பில் முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
அதுமட்டுமின்றி, ஐரோப்பிய ஒன்றியத்துடன் வர்த்தக உடன்படிக்கைகளை உருவாக்குவதில் பிரித்தானியா தோல்வியடையும் பட்சத்தில் உலக வர்த்தக அமைப்பின் விதிமுறைகளை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
உடன்படிக்கை எட்டப்படாமல் பிரித்தானியா வெளியேறுவது மிகப்பெரிய பாதிப்பாக அமையும் என்று பிரித்தானிய வர்த்தக அமைச்சர் லியாம் ஃவொக்ஸ் ஏற்கனவே தெரிவித்திருந்த நிலையில் அவருடைய கருத்தினை ஏற்றுக்கொள்ளும் வகையில் ஜெரமி கோர்பின் மேற்படி தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.