அஸ்ஸாம் மாநிலத்தை சேர்ந்த பிரபல நடிகை பிதிஷா பஜ்பருவா மர்மமான முறையில் மரணமடைந்ததை அடுத்து அவரது கணவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இவர், நடிகர் ரண்பீர் கபூருடன் இணைந்து ஜக்கா ஜாசூஸ் என்ற படத்தில் நடித்துள்ளார்.மேலும் பிதிஷா சிறந்த பாடகியும் ஆவார். இவர் நேற்று அவரது வீட்டில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.
இந்தநிலையில்,பிதிஷாவின் பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில் அவரது கணவர் நிஷீத் கைது செய்யப்பட்டுள்ளார்.