பாக்ஸ் ஆபிஸில் பின் தங்கிய தமிழ் படங்கள்- இந்த வாரம் யார் முதலிடம்?
அம்மா கணக்கு, ராஜா மந்திரி, மெட்ரோ ஆகிய படங்கள் கடந்த வாரம் திரைக்கு வந்தது. இந்த மூன்று படங்களும் பெரிய அளவில் ரசிகர்களிடம் சென்றடையவில்லை.
இந்நிலையில் தற்போது இப்படங்களில் சென்னை பாக்ஸ் ஆபிஸ் வசூல் விவரங்கள் வெளிவந்துள்ளது. இதில் அம்மா கணக்கு ரூ 25 லட்சம் வசூல் செய்து 2வது இடத்தில் உள்ளது.
மெட்ரோ ரூ 24 லட்சம் வசூல் செய்து 3வது இடத்தில் இருக்க, யாரும் எதிர்ப்பாரதவிதமாக ஹாலிவுட் படமான இண்டிபெண்டன்ஸ் டே-2 ரூ 84 லட்சம் வசூல் செய்து முதல் இடத்தில் உள்ளது. ராஜா மந்திரி 9 லட்சம் மட்டுமே வசூல் செய்துள்ளது.