நிலநடுக்கத்திலிருந்து பாதுகாக்கும் நவீன மெத்தை
தற்போதைய காலத்தில் அன்றாட வாழ்க்கைக்கு தேவையான எந்தவொரு பொருளையும் உற்பத்தி செய்யும்போது இயற்கை அனர்த்தங்களையும் கருத்தில் கொள்ள வேண்டியுள்ளது.
அதாவது அவை இயற்கை அனர்த்தங்களுக்கு ஈடுகொடுத்து பயன்படக்கூடியதாக இருக்க வேண்டும்.
பாரிய சேதத்தை ஏற்படுத்தக்கூடிய இயற்கை அனர்த்தங்களுள் ஒன்றாக நில நடுக்கம் காணப்படுகின்றது.
தூக்கத்தின் போது நில நடுக்கம் ஏற்பட்டால் நம்மால் உடனடியாக பாதுகாப்பு தேட முடியாது.
எனவே அதனால் ஏற்படும் பாதிப்புக்களை தடுக்கக்கூடிய வகையில் புதிய மெத்தை ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது.
இவ் உயர் தொழில்நுட்ப மெத்தையினை சீனாவை சேர்ந்த நபர் ஒருவர் வடிவமைத்துள்ளார்.
இதன் தொழிற்பாட்டினை வீடியோவில் பார்த்து அறிந்துகொள்ள முடியும்.