திருட்டுப்போன வாகனம் மோதியதில் தீப்பிடித்த வீடு?
கனடா- திருடப்பட்ட வான் ஒன்று பொலிசாரால் துரத்திச்செல்லப்பட்ட போது வீடொன்றுடன் மோதி தீப்பற்றி எரிந்த சம்பவம் வெள்ளிக்கிழமை காலை நடந்தது. வீட்டில் குடியிருந்தவர்கள் ஆபத்தின்றி தப்பிவிட்டனர்.
இச்சம்பவம் ஸ்காபுரோவில் எல்ஸ்மியர் மற்றும் கென்னடி வீதிக்கருகாமையில் அதிகாலை 3.45மணியளவில் இடம்பெற்றுள்ளது.
வீட்டிற்கு பலத்த சேதம் ஏற்பட்டிருக்கலாம் என நம்பபடுகின்றது.வீட்டில் குடியிருந்தவர்கள் திரும்ப அந்த வீட்டிற்கு போக முடியாது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். வீட்டின் கூரைகள் மோசமாக சேதமடைந்துள்ளதுடன் நடுப்பகுதி திறந்த நிலையில் காணப்படுகின்றது.
பொலிசார் புலன்விசாரனையில் ஈடுபட்டுள்ளனர்.இச்சம்பவத்துடன் தொடர்பற்ற விடயமாக பொலிசார் வெள்ளிக்கிழமை காலை சந்தேகத்திற்கிடமான வாகனம் விளக்குகளை அணைத்த வண்ணம் அணுகியததை கண்காணித்துள்ளனர்.
அதிகாரிகளிற்கு நெருக்கமாக வாகனம் சென்ற சமயம் சடாரென U-turn அடித்து அதி உயர் வேகத்தில் பறந்து விட்டதென அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அவர்கள் வாகனத்தை துரத்திச்சென்றுள்ளனர் ஆனால் கென்னடி வீதி கிழக்கில் வாகனம் மறைந்து விட்டது.
அதிகாரிகள் வாகனத்தை பிடித்த போதிலும் ஏற்கனவே வாகனம் வீட்டை மோதிவிட்டது.
சந்தேக நபர் சிறிது நேரத்தின்பின்னர் காவலில் வைக்கப்பட்டார்.
இவர் சாரதியா அல்லது பயணியா என்பது தெரியவரவில்லை.