தள்ளாடியபடி ஓடிய அண்ணனுக்கு உத்வேகம் அளித்து வெற்றி பெற செய்த தம்பி: பூரிப்பில் குலுங்கிய மைதானம்
இதன் இறுதிப்போட்டியில் பிரித்தானிய வீரர் ஒருவர் சுயநினைவின்றி ஓடிக்கொண்டிருந்த தனது சகோதரருக்கு உத்வேகம் அளித்து இரண்டாம் இடம் பெறசெய்து வெற்றி பெற வைத்துள்ளார்.
பிரித்தானிய ஓட்டப்பந்தய வீரர் Alistair, ஒடிக்கொண்டிருக்கையில் சுயநினைவை இழந்து ஓடமுடியாமல் தள்ளாடியுள்ளார்.
அப்போது இவரை கடந்து வந்த, தென் ஆப்பிரிக்க வீரர் Henri Schoeman வேகமாக ஓடி முதல் இடத்திற்கு முன்னேறினார்.
இதனால் இரண்டாம் இடத்திற்கு தள்ளப்பட்ட Alistair ஓடமுடியாமல் தள்ளாடிபடிய வந்துள்ளார். இவருக்கு அடுத்தபடியாக மூன்றாவதாக ஓடிவந்த இவரின் சகோதரர் Jonathan Brownlee, தனது அண்ணனின் நிலையை பார்த்து, அவர் எப்படியாவது இரண்டாம் இடத்தை பிடிக்க வேண்டும் என எண்ணியுள்ளார்.
அதன்பொருட்டு, தனது அண்ணனின் தோள்களில் தனது கையினை போட்டு, அவரையும் தன்னோடு சேர்த்து ஓடிவரச்செய்துள்ளார், இறுதியில் எல்லைக்கோட்டை தொடுகையில், இவரே தனது அண்ணணை தள்ளிவிட்டு இரண்டாம் இடம் பிடிக்க வைத்து, இவர் மூன்றாம் இடத்தை கைப்பற்றியுள்ளார்.
இந்த அண்ணன் தம்பியின் பாசப்போராட்டத்தை மைதானத்தில் இருந்த ரசிகர்கள் அனைவரும் உற்சாகமாக கரகோஷம் எழுப்பி ரசித்தனர்.