செர்பியா உணவு விடுதியில் துப்பாக்கி சூடு: 5 பேர் பலி:20 பேர் காயம்
சேர்பியாவில் உள்ள சிற்றுண்டிச் சாலை ஒன்றில் வாடிக்கையாளர்கள்அமர்ந்திருந்தநிலையில்திடீரென நுழைந்த நபர் ஒருவர் சரமாறியாக துப்பாக்கி பிரயோகம் செய்துள்ளார்என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவத்தில் குறித்த நபரின் மனைவி மற்றும் ஐவர் கொல்லப்பட்டுள்ளதாகதெரிவிக்கப்பட்டுள்ளது.
Zrenjanin நகரில் இடம் பெற்ற இந்த தாக்குதலில் பலர் படுகாயத்திற்குஉள்ளாகியதாகவும்,சம்பவத்தில் மூன்று சிறுவர்கள் இருந்ததாகவும் உள்நாட்டு அமைச்சு தெரிவித்துள்ளது.
துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்ட நபரை கைது செய்துள்ளதாகவும் தற்போது விசாரணைகள்மேற்கொண்டுவருவதாகவும் பொலிஸார் கூறியுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவரவைதாவது, துப்பாகிக ஏந்திய நபர் சிற்றுண்டி சாலைக்கு வருகை தந்து, தன் மனைவி ஒரு குழு நண்பர்களுடன் இருந்ததை பார்த்ததாகவும் பின்னர் துப்பாக்கியை எடுத்துவந்து சுட்டதாகவும் சம்பவத்தை நேரில் பார்வையிட்ட நபர் ஒருவர் ஊடகத்திற்கு தெரிவித்துள்ளார்.
1990 ஆம் ஆண்டு பல்கானில் இடம் பெற்ற யுத்தத்தின் போது பயன்படுத்தப்பட்ட ஆயுதம் என்று உள்நாட்டு அமைச்சர் Nebojsa Stefanovic குறிப்பிட்டுள்ளார். சம்பவத்தில் படுகாயமடைந்தவர்கள் சிகிச்சையினை பெறுவதற்காக வைத்தியசாலையில் அனுமதித்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.