குப்பைத் தொட்டியில் இருந்து சடலமாக மீட்கப்பட்ட குழந்தையின் தாய் கைது
ஒன்ராறியோவில் குப்பை தொட்டி ஒன்றில் இருந்து குழந்தை ஒன்றின் சடலம் மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில் குறித்த குழந்தையின் தாயாரை ஒன்ராறியோ பொலிஸார் கைது செய்துள்ளனர்.
கடந்த வியாழக்கிழமை ரிச்மொன்ட் மற்றும் மில் வீதிகளுக்கு அருகில் அமைந்துள்ள கட்டடம் ஒன்றிற்கு அருகில் இருக்கும் குப்பைத் தொட்டி ஒன்றில் இருந்து குழந்தை ஒன்றின் சடலம் கண்டெடுக்கப்பட்டது.
எனினும் அக்குழந்தை எவ்வாறு உயிரிழந்தார் என்று அறியப்படவில்லை. அவரது உயிரிழப்பு குறித்து பிரேத பரிசோதனையின் பின்னரே கருத்து தெரிவிக்கப்படும் என தெரிவித்த பொலிஸார், சம்பவம் தொடர்பிலான விசாரணைகளை நடத்தி வந்தனர்.
இதனைத் தொடர்ந்து குழந்தையின் சடலம் கண்டுபிடிக்கப்பட்ட இடத்தில் இருந்து 200 கிலோமீற்றர் தூரத்தில் உள்ள ஒன்ராறியோ அம்ஹேர்ஸ்ட்பேர்க் பகுதியில் வைத்து அக்குகுழந்தையின் தாயாரை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
23 வயதுடைய அத்தாயிடம் தற்பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.