கார் கதவை உடைத்து உணவு திருடிய கரடி
பசித்திருந்த கரடி ஒன்று நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் ஒன்றின் கதவை உடைத்துத் திறந்து உணவை எடுக்க முயன்றதாக நம்பப்படும் சம்பவத்துடன் தொடர்புடைய படங்களை வன்கூவர் பொலிஸார் வெளியிட்டுள்ளனர். இந்தச் சம்பவம் கடந்த வார இறுதியில், மேற்கு வன்கூவர் நகரில் இடம்பெற்றுள்ளது.
கரடியால் குறித்த கார் கடுமையாகச் சேதமடைந்திருப்பதை வெளிப்படுத்துவதாக பொலிஸாரால் வெளியிடப்பட்ட புகைப்படங்கள் அமைந்துள்ளன. இதன் சேதம் 10 ஆயிரம் டொலர்கள் என மதிப்பிடப்பட்டுள்ளது.
சம்பவம் இடம்பெற்ற பகுதியில் கறுப்பு முடி மற்றும் நக அடையாளங்கள் பதிந்துள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. அதனை வைத்துப் பார்க்கும் போது, கறுப்பு நிறக்கரடி இந்த திருகுதாளங்களைச் செய்துள்ளதாக அனுமானித்துள்ளனர். குறித்த காரினுள் இருந்து பெருந்தொகையான உணவுகளும் எடுக்கப்பட்டுள்ளன.
இவ்வாறான சம்பவங்கள் அப்பகுதியில் நடைபெறுவது முதல் தடவை அல்ல என அங்கு வசிப்பவர்கள் குறிப்பிடுகின்றனர்.
எனவே, இவற்றில் இருந்து தப்புவதற்காக கார் உள்ளிட்ட வாகனங்களில் எவ்வித உணவுப்பண்டங்களையும் வைக்காமல் சுத்தமாக வைத்திருக்குமாறு அறிவுறுத்தப்படுகின்றனர்.
– See more at: http://www.canadamirror.com/canada/64663.html#sthash.vi5nIDYN.dpuf