கனிய எண்ணெய் விநியோக சேவைகள் அத்தியாவசிய தேவையாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் நேற்று நள்ளிரவு வெளியிடப்பட்டுள்ளது.
ஜனாதிபதியின் பணிப்புரைக்கு அமைய ஜனாதிபதியின் செயலாளர் ஒஸ்டின் பெர்னான்டோ கையெழுத்திட்டு அந்த வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.
அதில் பெற்றோலிய உற்பத்தி மற்றும் திரவ வாயு என்பற்றின் விநியோகப் பணிகள் அத்தியாவசியமாக்கப்பட்டுள்ளன.
கனிய எண்ணெய் சேவையாளர் இன்றைய தினம் பணிக்கு திரும்பாவிட்டால், அவர்கள் பணியில் இருந்து தாமாகவே விலகியதாக கருதப்படுவர் என அரசாங்கம் அறிவித்துள்ளது.