உள்ளுராட்சி சபைத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியும் இணைந்து ஆட்சியமைக்கத் தேவையான இடங்களில் இணைந்து ஆட்சியமைக்கும் என அமைச்சரவைப் பேச்சாளர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.
பாராளுமன்ற வரலாற்றில் இதுபோன்ற சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. இதனால், உள்ளுராட்சி சபைகளில் இது இடம்பெறுவது பெரியதொரு விடயமல்ல எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.