TTC பேரூந்தில் தனியாக பயணம் செய்த 9-வயது சிறுமி?
கனடா- TTC பேரூந்து ஒன்றில் தனியாக பயணம் செய்த பெண் கண்டுபிடிக்கப்பட்டாள்.ரொறொன்ரோவின் நகர மையத்தில் இச்சம்பவம் நடந்துள்ளது. யங் மற்றும் அடெலெயிட் வீதியில் அதிகாலை 3.20மணியளவில் பேரூந்தில் இப்பெண் தனியாக பயணித்ததை கண்டு பிடித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே பேரூந்தில் பயணித்த ஒருவர் இதனை கண்டுள்ளதாகவும் தனியாக பயணம் செய்யும் அளவிற்கு மிகவும் சிறியவள் எனவும் தெரிவித்துள்ளார். சாரதியிடம் தெரிவித்த பின்னர் பொலிசார் அழைக்கப்பட்டனர்.இவளின் அடையாளங்களை பொலிசார் உறுதிப்படுத்தவில்லை அத்துடன் குடும்பத்தினர் எவரையும் கண்டறியவும் முடியவில்லை..
இச்சிறுமிக்கு 9-வயது இருக்கலாம் என பொலிசார் நம்புகின்றனர்.
புலன்விசாரனையில் குழந்தைகள் உதவி சங்கமும் ஈடுபட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.