பிரபல மொபைல் நிறுவனமான Moto தனது புதிய தயாரிப்பான Moto G5 Plus எனும் மொபைலினை சமீபத்தில் அறிமுகப்படுத்தியது.
Qualcomm Snapdragon 430SoC Processor இதில் பயன்படுத்தப்பட்டுள்ளது. Moto G5 Plus போனில் 3GB RAM மற்றும் 32GB மொபைல் போன் மெமரியானது பயன்படுத்தப்பட்டுள்ளது.
ஆண்ட்ராய்ட் 7.0 Nougat இயங்கு தளத்தினை உடையது. Moto நிறுவனம் இதுவரை வெளியிட்ட மொபைல் போன்களில் இந்த மொபைல் போனில் மட்டுமே பேட்டரியினை தனியாக கழற்றும் வண்ணம் அமைக்கப்பட்டுள்ளது.
அதிக வேகத்துடன் இயங்கும் ஆண்ட்ராய்டு இயங்கு தளத்தினை கொண்டுள்ளது. மேலும் இந்த போனின் திரையினை அழுத்தினால் உடனடியாக Google Tap க்கு செல்லும் வண்ணம் அமைக்கப்பட்டுள்ளது.
மொபைல் போனானது Water Proof-வசதி இல்லை என்பது இதில் உள்ள குறையாகும். அமேசான் தளத்தில் இந்த மொபைல்போனினை வாங்குபவர்களுக்கு இலவசமாக MicroSD மற்றும் Earphone வழங்கப்படுகிறது.