உலகின் மிக பெரிய காப்பீட்டு சந்தையில் ஒன்றாக கருதப்படும் Lloyd’s of London நிறுவனம் தனது புதிய அலுவலகத்தை பிரஸல்ஸ் நகரில் அமைக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா வெளியேறவுள்ளது. இது தொடர்பிலான நடவடிக்கைகளில் பிரித்தானியா அரசாங்கம் மும்முரமாக ஈடுபட்டுள்ளது.
ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறுவது தொடர்பிலான பிரித்தானிய பிரதமர் கையெழுத்திட்ட அறிக்கை நேற்று ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைவரிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
குறித்த அறிக்கை கையளிக்கப்பட்டு ஒரு நாள் கூட ஆகாத நிலையில், Lloyd’s of London நிறுவனம் இன்று தனது திடீர் முடிவை அறிவித்துள்ளது.
இதன்படி, ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா வெளியேறுவதால் தமது வர்த்தக நடவடிக்கைகளை இழக்க முடியாது என அந்த நிறுவனம் அறிவித்துள்ளது.
இதேவேளை, 329 ஆண்டுகளாக லண்டனில் இயங்கி வந்த Lloyd’s of London நிறுவனத்தின் இந்த திடீர் அறிவிப்பால் பிரித்தானிய பொருளாதாரத்தில் பாரிய திருப்பு முனையாக அமைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.