ஈழ விடுதலைக்காக தமது இன்னுயிர்களை ஈர்ந்த மாவீரர்களின் தியாகத்தைப் போற்றும் புனித வாரத்தில் புனிதம் போணுவது எம் அனைவரதும் கடமையாகும்.
இக் கால கட்டத்தில் களியாட்ட நிகழ்வுகளை நடாத்துவதை ஒரபோதும் அனுமதிக்க இயலாது. அவ்வாறு செய்பவர்கள் ஈழ விடுதலைக்கு எதிரான தரப்பினரே ஆவார்கள். அவர்களை மக்கள் விரட்டி ஒதுக்க வேண்டும்.
மாபெரும் தியாகங்களை செய்து உன்னதமான ஒரு போராட்டத்தை எமது இனம் முன்னெடுத்துள்ளது. அதற்கு ஏற்றால் போல் நடப்பது மக்கள் அனைவரதும் கடமை.
கலைஞர்களும், ஊடகவியலாளர்களும், செயற்பாட்டாளர்களும் மாவீரர்களுக்கு தான் முதலில் மரியாதை செலுத்த வேண்டும். அதனை தார்மீகக் கடமையாக கொள்ள வேண்டும்.
மாவீரர்களின் இலட்சியத்தை முதலில் நாம் உணர்வது முக்கியமானது. அதற்கான செயற்பாடு என்பது நம் வாழ்விலும் செயலிலும் அர்த்தம் கொள்ள வேண்டும்.
மாவீரர் புனித வாரம் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில் அவர்களின் கனவுகளை நெஞ்சில் சுமந்தபடி அவர்களுக்கு உண்மையான வகையில் எமது பயணத்தை தொடர வேண்டும்.
கிருபா பிள்ளை