iPhone 7 தொடர்பாக வெளியாகிய புதிய தகவல்
இன்னும் இரு மாதங்களில் அப்பிள் நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட் கைப்பேசியான iPhone 7 அறிமுகமாகவுள்ளது.
இந் நிலையில் தற்போது குறித்த கைப்பேசி தொடர்பில் மற்றுமொரு தகவல் வெளியாகியுள்ளது.
இத் தகவலின்படி புதிதாக அறிமுகம் செய்யப்படவுள்ள கைப்பேசியில் உள்ளடக்கப்படும் மின்கலம் ஆனது 1960 mAh உடையதாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் இக் கைப்பேசிகள் ஒரு முறை சார்ஜ் செய்ததன் பின்னர் நீண்ட நேரம் பாவனை செய்யக்கூடியதாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு முன்னர் அறிமுகம் செய்யப்பட்ட iPhone 6S மற்றும் iPhone 6S Plus ஆகிய கைப்பேசிகளில் 1715 mAh மின்கலமே தரப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
தவிர iOS 10 இயங்குதளம் மற்றும் 12 மெகாபிக்சல்களை உயைட கமெராக்களையும் கொண்டிருக்கும் என ஏற்கணவே தகவல் வெளியாகியிருந்தமை சுட்டிக்காட்டத்தக்கது.