Instagram Live Stories இப்போது உலகளாவிய ரீதியில் அறிமுகம்!
புகைப்படங்கள் மற்றும் சிறிய அளவிலான வீடியோக்களை பகிர்ந்து மகிழும் சேவையை தரும் சமூகவலைத்தளமான Instagram நேரடி ஒளிரப்புக்களையும் செய்யும் வசதியினை தருகின்றது.
இவ் வசதியின் ஊடாக நேரடியாகவே உடனுக்குடன் நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் தகவல்களை பரிமாறிக்கொள்ள முடியும்.
சில மாதங்களுக்கு முன்னர் அறிமுகம் செய்யப்பட்ட இவ் வசதியானது குறிப்பிட்ட சில நாடுகளில் மட்டுமே கிடைக்கக்கூடியதாக இருந்தது.
இந்நிலையில் தற்போது உலகளாவிய ரீதியில் உள்ள பயனர்கள் அனைவரும் இவ் வசதியினைப் பெறக்கூடியவாறு மாற்றம் கொண்டுவரப்பட்டுள்ளது.
Instagram அப்பிளிக்கேஷனின் புதிய பதிப்பினை அப்டேட் செய்துகொள்வதன் ஊடாக அனைவரும் குறித்த வசதியினைப் பெற்றுக்கொள்ள முடியும்.