300 பயணிகளுடன் விபத்தில் தரையிறங்கி தீப்பிடித்த எமிராட்ஸ் விமானம்.
யுனைரெட் அராப் எமிராட்ஸ் விமானம் ஒன்று இந்தியாவில் இருந்து 300மக்களுடன் டுபாய் நோக்கி புறப்பட்டுள்ளது.இந்த விமானம் டுபாயின் முக்கியமான சர்வதேச விமான நிலையத்தில் விபத்தில் தரையிறங்கியுள்ளது.
விமான நிலையத்தில் மோதிய விமானம் பின்னர் எரிந்த வண்ணம் வெடித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விமானத்தில் 24பிரித்தானியர்கள், 6அமெரிக்கர்கள், நான்கு ஐரிஷ் நாட்டவர்கள், 2அவுஸ்ரேலியர்கள் உட்பட 300பேர்கள் பயணித்துள்ளனர்.
அனைவரும் தெய்வாதீனமாக தப்பிவிட்டதாக கூறப்படுகின்றது. விமானம் பாரிய தீப்பிழம்பு ஒன்றினால் முற்றாக அழிக்கப்படுவதற்கு சிறிது முன்னராக அனைவரும் வெளியேறி விட்டனர்.
விமானம் திருவனந்தபுரம் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டுள்ளது.
விமானத்தின் இறங்கும் கியரில் கோளாறு இருப்பதாக தரையிறங்குவதற்கு சிறிது முன்னராக பயணிகளிற்கு தெரிவிக்கப்பட்டதாகவும் தெரிய வந்துள்ளது.
விமானத்தில் ஓடுபாதையில் தீப்பிழம்பு ஒன்று வெடித்து சிதறியுள்ளது. புகை மண்டலம் சூழ்ந்தது.
நம்ப முடியாத வகையில் விமானத்தில் இருந்து 18-பணி குழுவினர் உட்பட்ட அனைவரும் அவசர நேர வெளியேற்ற பாதைகளினூடாக வெளியேறிவிட்டனர்.
விமானத்தின் உள் புகை மண்டலம் ஏற்பட்டதால் சிலருக்கு சுவாசிக்கும் பிரச்சனை ஏற்பட்டது. விமானம் தரையிறங்குவதற்கு முன்னர் விமானி அவசரகால சமிக்ஞையை அறிவித்துள்ளதாக நம்பபடுகின்றது. இதனால் பணியாளர்கள் விமானத்தின் அவசர வெளியேற்றங்களை திறந்து விட்டதால் பயணிகள் விமானம் தரையிறங்குவதற்கு சில நிமிடங்கள் முன்னராக வெளியேறிவிட்டனர்.
விபத்திற்கான காரணம் தெரியவரவில்லை.
671 total views, 213 views today
– See more at: http://www.canadamirror.com/canada/67239.html#sthash.x9xB8BwI.dpuf