பெங்காஸி கார்குண்டு தாக்குதல்: 22 பேர் உயிரிழப்பு
லிபியாவின் கிழக்கு நகரான பெங்காஸியில் மேற்கொள்ளப்பட்ட கார் குண்டு தாக்குதலில் சுமார் 22 பேர் உயிரிழந்ததுடன், 20 பேர்வரை காயமடைந்துள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
கிழக்கு தளபதி கலீஃபா அஃப்தாருக்கு விசுவாசமான படையினரை இலக்கு வைத்தே நேற்றைய (செவ்வாய்க்கிழமை) தாக்குதல் முன்னெடுக்கப்பட்டிருந்தது.
மேற்கு பெங்காஸியின் குவார்ஷா மாவட்டத்திலுள்ள குடியிருப்பு பகுதியொன்றில் மேற்கொள்ளப்பட்ட குறித்த தாக்குதலின் போதான சக்திவாய்ந்த குண்டு வெடிப்பில் மூன்று மாடிக் கட்டிடமொன்று தரைமட்டமாகியதாக தாக்குதலை நேரில் கண்ட ஒருவர் குறிப்பிட்டார்.
ஆயுதக் குழுக்களின் ஒரு கூட்டணியான பெங்காஸி புரட்சிகர ஷுரா அமைப்பு குறித்த தாக்குதலுக்கு பொறுப்பேற்றுள்ளதாக, ஆயுதக் குழுவுடன் தொடர்புடைய செய்தித் தளங்களில் வெளியாகியுள்ளன.
ஷுரா அமைப்பிற்கு எதிராக கடந்த ஈராண்டுகளுக்கு முன்னர் கலீஃபா அஃப்தார் பிரசாரம் முன்னெடுத்ததை தொடர்ந்து அதனை தொடர்ந்து பெங்காஸியில் வன்முறை வெடித்தமை குறிப்பிடத்தக்கது.
– See more at: http://www.canadamirror.com/canada/67213.html#sthash.qLjOSpeg.dpuf