ஐ.எஸ் தீவிரவாதிகளிடம் இருந்து தப்பிய பெண் இராணுவத்திடம் சரண்!
உலகையே அச்சுறுத்தி வரும் ஐ.எஸ் தீவிரவாதிகளிடம் அகப்பட்டுக்கொண்ட நெதர்லாந்து பெண் ஒருவர், அங்கிருந்து தப்பித்து தற்போது மீண்டும் நெதர்லாந்தை வந்தடைந்துள்ளார்.
இது தொடர்பில் கருத்து தெரிவித்த அந்த பெண், “கடந்த வருடம் டிசெம்பர் மாதம், என்னை எனது கணவர் ஏமாற்றி சிரியாவுக்கு அழைத்துச் சென்றார்” என தெரிவித்தார்.
லோரா ஏஞ்சலா ஹன்சென் (Laura Angela Hansen) என அழைக்கப்படும் குறித்த பெண், நெதர்லாந்தில் உள்ள ஹாக் (Hague) எனும் பகுதியில் வசித்து வந்துள்ளார்.
தனது இளவயதிலேயே இஸ்லாம் மதத்திற்கு மதம் மாற்றம் செய்யப்பட்ட அந்த பெண், நாளடைவில் நெதர்லாந்தில் வசித்து வந்த பாலஸ்தீனிய ஆண் ஒருவரை திருமணம் செய்துள்ளார்.
எனினும், அவரது கணவரே அவரை திட்டமிட்டு சிரியாவுக்கு அனுப்பி வைத்ததாக, தொலைக்காட்சி சேவை ஒன்றுக்கு அவர் அளித்த செவ்வியில் லோரா தெரிவித்திருந்தார்.
சிரியாவில் உள்ள ரக்கா பகுதியில், ஐ.எஸ் தீவிரவாதிகள் அவரை பணயக்கைதியாக பிடித்து வைத்திருந்ததாகவும் பின்னர் அங்கிருந்து வடக்கு ஈராக்கிற்கு அழைத்து சென்றதாகவும் லோரா குறிப்பிட்டுள்ளார்.
ஈராக்கிற்கு அழைத்து செல்லப்ட்ட லோரா ஒருவாறு அங்கிருந்து தப்பித்து, அங்குள்ள Peshmerga எனும் இராணுவ படையிடம் அவரது இரு குழந்தைகளுடன் சரணடைந்துள்ளார்
– See more at: http://www.canadamirror.com/canada/67197.html#sthash.MqRnFDpE.dpuf