பாலாவையே பயந்து ஓட வைத்த நபர் இவர் தான்?
இயக்குனர் பாலா மிகவும் முரடானவர். இவர் படத்தில் நடிப்பது என்பது சாதரண விஷயமில்லை, பலரும் இவரிடம் பேசவே பயந்து நடுங்குவார்கள் என இவருக்கு ஒரு பிம்பம் உள்ளது.
இந்நிலையில் இன்று நடந்த தர்மதுரை இசை வெளியீட்டு விழாவில் பாலா ‘நான் சீனுராமசாமியை பார்த்தாலே பயந்து ஓடிவிடுவேன்.
ஏனெனில் அந்த அளவிற்கு எப்போதும் சினிமா, சினிமா, சினிமா என பேசிக்கொண்டே இருப்பார், இரவு 1 மணிக்கெல்லாம் போன் செய்து கதை சொல்வான்’ என கலகலப்பாக பேசினார்.