இலங்கை அணிக்கு நெருக்கடி: 2வது டெஸ்டில் நுவான் பிரதீப் ஆடுவது சந்தேகம்
காலே மைதானத்தில் நடக்கும் அவுஸ்திரேலியாவுக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணியின் வேகப்பந்துவீச்சாளர் நுவான் பிரதீப் ஆடுவதில் சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
இலங்கை- அவுஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 2வது டெஸ்ட் காலே மைதானத்தில் எதிர்வரும் 4ம் திகதி நடைபெற இருக்கிறது. இதற்காக இரு அணி வீரர்களும் தீவிர பயிற்சி எடுத்து வருகிறார்கள்.
இந்நிலையில் நேற்று பயிற்சியில் ஈடுபட்ட போது நுவான் பிரதீப்பிற்கு தொடையில் காயம் ஏற்பட்டது. நாளை அவருக்கு உடல்தகுதி பரிசோதனை செய்யப்பட இருக்கிறது.
இதில் அவர் தகுதி பெறாவிட்டால் இந்த போட்டியில் பங்கேற்க மாட்டார். இவருக்கு பதிலாக 2 இரண்டு புதுமுக பந்து வீச்சாளர்களில் ஒருவர் இடம்பெறுவார்.
இலங்கை அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளராக இவர் மட்டும்தான் தற்போது அணியில் உள்ளார்.
ஏற்கனவே அந்த அணியின் தமிகா பிரசாத், துஷ்மந்தா சமீரா, செஃப்ரே வான்டர்சாய் மற்றும் லக்மல் ஆகியோர் காயத்தில் அவதிப்பட்டு வருகிறார். இதனால் இலங்கை அணிக்கு சற்று நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
இவர் அவுஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்சில் 36 ஓட்டங்களை விட்டுக் கொடுத்து 2 விக்கெட்டை எடுத்திருந்தார்.