2வது டெஸ்டில் அபார சதம்: புதிய மைல்கல்லை எட்டிய ரஹானே
மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான 2வது டெஸ்டில் சதம் விளாசிய ரஹானே வெளிநாட்டு மண்ணில் தனது 5வது சதத்தை பதிவு செய்துள்ளார்.
இந்தியா- மேற்கிந்திய தீவுகள் அணிகள் மோதும் 2வது டெஸ்ட் போட்டி கிங்ஸ்டனில் நடந்து வருகிறது.
இதில் முதல் இன்னிங்ஸில் மேற்கிந்திய தீவுகள் அணி 196 ஓட்டங்களுக்கு சுருண்டது. இந்தியா முதல் இன்னிங்சை 500 ஓட்டங்களில் ‘டிக்ளேர்’ செய்துள்ளது.
தொடக்க வீரராக களமிறங்கிய லோகேஷ் ராகுல் 158 ஓட்டங்கள் எடுத்தார். இதனையடுத்து வந்த ரஹானே தன் பங்கிற்கு சதம் விளாசினார்.
237 பந்துகளில் 13 பவுண்டரி, 13 சிக்சர்களுடன் 108 ஓட்டங்கள் எடுத்து அவர் ஆட்டமிழக்காமல் இருந்தார்.
28 வயதான ரஹானேவுக்கு இது 7வது சதமாகும். அதேபோல் வெளிநாட்டு மைதானத்தில் தனது 5வது சதத்தை பதிவு செய்தார்.
வெளிநாட்டு மண்ணில் ரஹானேவின் சதங்கள் விபரம்
நியூசிலாந்து – 118 (பெப்ரிவரி 2014)
இங்கிலாந்து – 103 (யூலை 2014)
அவுஸ்திரேலியா – 147 (டிசம்பர் 2014)
இலங்கை – 126 ( ஆகஸ்டு 2015)
மேற்கிந்திய தீவுகள் – 108 (ஆகஸ்டு 2016)