என் மகள் சினிமாவில் அறிமுகமா? கௌதமியின் சிறப்பு பேட்டி
நடிகை கௌதமி பாபநாசம் படத்துக்கு பிறகு மோகன்லாலுடன் நமது என்ற படத்தில் நடித்துள்ளார். இப்படம் இந்த வாரம் 5ம் தேதி மூன்று மொழிகளில் வெளியாகவுள்ளது.
இப்படத்துக்காக நமக்கு அளித்த பேட்டியில் இந்த படத்தில் நடிக்க மிக முக்கிய காரணம் உண்டு, இயக்குனர் சந்திரசேகரிடம் இந்த படத்தில் நான் ஏன் நடிக்க வேண்டும் என்று கேட்டதற்கு, ”நான் கதை எழுதும் போதே என் கனவு கதாபாத்திரத்தில் நீங்கள் தான் வந்தீர்கள், என்னால் வேறு யாரையும் பார்க்கமுடியவில்லை, அப்படி நீங்கள் நடிக்க வில்லை என்றால் இதற்கு பிறகு தான் யாரை நடிக்க வைப்பது என்று யோசிக்க வேண்டும்” என்று பதிலளித்தார்.
ஆகையால் நான் இதில் நடிக்க ஒப்புக்கொண்டேன் என்றார். மேலும் நமது பேட்டியில் கமல், மோகன்லால் பற்றியும் , பெண்களின் பாதுகாப்பு , வெற்றி, தோல்வி பற்றியெல்லாம் பகிர்ந்துள்ளார்.
மேலும், தன் மகள் சுப்புலட்சுமி சினிமாவில் விரைவில் அறிமுகமாவார் என்றும் ஆனால் நடிகையாக அல்ல, இயக்குனராக எனவும் தெரிவித்துள்ளார்.
இதோ கௌதமியின் சிறப்பு பேட்டி