TTC பேரூந்து, கார் விபத்தில் நால்வர் காயம்.
கனடா-ஸ்காபுரோவில் TTC பேரூந்து ஒன்றுடன் கார் ஒன்று பின்புறமாக மோதியதில் நால்வர் காயமடைந்தனர்.திங்கள் கிழமை அதிகாலை இந்த விபத்து மோனிங்சைட்டில் மெல்வேர்ன் பகுதியில் நடந்துள்ளது.செப்பேட் அவெனியு மேற்கில் ஹாவ் வே அவெனியுவில் நடந்துள்ளது.
அவ்விடத்திற்கு விரைந்த தீயணைப்பு வீரர்கள் காரின் கூரையை வெட்டி 45 நிமிடங்கள் வரை காரிற்குள் அகப்பட்டு கொண்டிருந்த மனிதர் ஒருவரை வெளியே எடுத்துள்ளனர்.
பலர் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும் ஆனால் எவருக்கும் உயிராபத்தான காயங்கள் ஏற்படவில்லை எனவும் ரொறொன்ரோ பொலிசார் தெரிவித்தனர்.
மதுபானம் விபத்திற்கு காரணமாகலாம் என கருதப்படவில்லை.
சம்பவம் நடந்த போது அவ்வழியால் சென்றவர்கள் உதவியதாகவும் அவர்களிற்கு பொலிசார் நன்றி தெரிவித்தனர்.