80வருடங்களின் பின்னர் பூத்த பிண பூ!
யு.எஸ்.-நியு யோர்க் தாவரவியல் பூங்காவில் “corpse flower,” எனப்படும் ஒரு அரிய பிரமாண்டமான மரத்தில் அதன் பிரபல்யமான கொடூரமான துர்நாற்றம் வீசும் பூ பூத்துள்ளது. இதனை பார்ப்பதற்கு பார்வையாளர்கள் வெள்ளம் நியு யோர் தாவரவியல் பூங்காவை நோக்கி கரை புரண்டோடுகின்றனர்.
கடைசியாக இந்த மரத்தில் 1939ல் இந்த பூ பூத்தது. இதனை பார்ப்பது வாழ்க்கையில் ஒரு தரம் மட்டுமே என பார்வையாளர்கள் கருதுகின்றனர்.
இந்த பிண மணம் வீசும் பூ ஒரு அரிய வெப்ப மண்டல மாதிரியாகும்.இந்தோனேசியாவின் மேற்கு சமத்ரா பகுதியில் இருந்து தோற்று விக்கப்பட்டதாகும்.தசாப்தங்களிற்கு ஒரு முறை மலரும் என கூறப்படுகின்றது.
பூத்த பின்னர் 24முதல் 36மணித்தியாலங்கள் வரை இருக்கும்.
இந்த அரிய சந்தர்ப்பத்தை கண்டு களிக்கும் பார்வையாளர்கள் இதன் மணம் குறித்து கவலை கொள்ளவில்லை.