குடியிருப்பு பகுதி நீச்சல் தடாகத்தில் மூழ்கி மனிதன் மரணம்?
கனடா- யோர்க் பிராந்தியத்தில் வீடொன்றின் பின்னால் அமைந்துள்ள நீச்சல் தடாகத்தில் மூழ்கியதால் மனிதரொருவர் இறந்துள்ளதாக பிராந்திய பொலிசார் தெரிவித்துள்ளனர்.
யோர்க் பிராந்தியத்தில் நியு மார்க்கெட்டில் இச்சம்பவம் நடந்துள்ளது.
தடாகத்தில் கிடக்க கண்டு பிடிக்கப்பட்ட இவர் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு பின்னர் இறந்து விட்டதாக அறிவிக்கப்பட்டது.
இறந்தவர் சம்பவம் நடந்த வீட்டில் வசிக்கவில்லை என்பதும் தெரியவந்துள்ளது.ஆனால் வீட்டின் குடியிருப்பாளர்கள் அங்கு வசிக்கின்றனர்.
இந்த மரணம் ஒரு மருத்துவ விபத்தா என பொலிசார் புலன்விசாரனை செய்கின்றனர்.