செல்பி மோகத்தால் உயிரிழந்த தடகள வீராங்கனை!
மத்திய பிரதேச மாநிலத்தில் தடகள வீராங்கனை செல்பி எடுக்க முயற்சித்த போது பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்திரகாண்ட் மாநிலத்தை சேர்ந்தவர் பூஜாகுமாரி,தேசிய தடகள ஒட்டப்பந்தய வீராங்கனையான இவர் உத்திரபிரதேச மாநிலத்தில் உள்ள போபாலில் பயிற்சியில் ஈடுபட்டு கொண்டிருந்தார்.
பயிற்சியில் ஈடுபட்டு கொண்டிருந்த போது,விளையாட்டு மேம்பாட்டு ஆணையக் கட்டிடத்திலிருந்து தனது சக வீரர்களுடன் செல்பி எடுக்க முயன்றுள்ளார்.
அப்போது எதிர்பாராத விதமாக அருகிலுள்ள குளத்தில் தவறி விழுந்தார்,பூஜா குமாரிக்கு நீச்சல் தெரியாததால் நீரில் மூழ்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இச்சம்பவம் குறித்து விளையாட்டு மேம்பாட்டு அதிகாரிகள் கூறியதாவது: பூஜா குமாரி குளத்தில் விழுந்தவுடன்,அவருடன் இருந்த சக வீரர்களுக்கு நீச்சல் தெரியாததால் அவரை காப்பாற்ற இயலவில்லை.
மேலும் உதவிக்கு விடுதியில் இருந்து சிலர் வருவதற்குள் அவர் உயிரிழந்து விட்டதாக கூறினார்.
பூஜா குமாரி இறந்த சம்பவம் அங்கிருந்த விளையாட்டு வீரர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.