“தமிழ்நாடு பிரிமியர் லீக்”- ஏலம் தொடங்கியது! அசத்தப் போவது யார்?
தமிழ்நாடு பிரிமியர் லீக் தொடருக்கான போட்டியில் வீரர்களுக்கான ஏலம் சென்னையில் தொடங்கியது.
இந்தியன் பிரீமியர் கிரிக்கெட் லீக்(IPL) போட்டியை போல, தமிழ்நாட்டில் தமிழ்நாடு பிரிமீயர் லீக் போட்டி வரும் ஆகஸ்ட் மாதம் தொடங்குகிறது.
இதற்கான போட்டியில் சென்னை, திருவள்ளூர், மதுரை, காஞ்சிபுரம், திண்டுக்கல், காரைக்குடி, கோவை, தூத்துக்குடி உட்பட 8 மாவட்ட அணிகள் பங்கேற்கின்றன.
இதற்கான போட்டியில் தமிழகத்தை சார்ந்த இந்திய வீரர்கள் சிலர் பங்கேற்கின்றனர்.
அவர்களில் நட்சத்திர ஆட்டக்காரர்களான அஷ்வினை திண்டுக்கல் அணியும், தினேஷ் கார்த்திக்கை தூத்துக்குடி அணியும், முரளி விஜய் கோயமுத்தூர் அணியும் மற்றும் பத்ரிநாத்தை காரைக்குடி அணியும் வாங்கியுள்ளனர்.
தமிழ்நாடு பிரிமியர் லீக் போட்டியை போல மஹாராஷ்டிரா பிரிமியர் லீக் மற்றும் கர்நாடக பிரிமீயர் லீக் போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன.
கர்நாடக பிரிமீயர் லீக் போட்டி கடந்த 2009-ம் ஆண்டில் இருந்து நடத்தப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.