வைரமுத்து மன்னிப்பை ஏற்றுக்கொள்ளாத கபாலி படக்குழு
கபாலி படம் உலக அளவில் பல சாதனைகளை செய்து வருகின்றது. இந்நிலையில் இப்படம் ரசிகர்களிடம் கலவையான விமர்சனங்களை சந்தித்து வர, வைரமுத்து அவசரத்தில் ஒரு வார்த்தையை விட்டார்.
அது என்னவென்றால் கபாலி படம் தோல்வி என்று ஒரு மேடையில் குறிப்பிட்டு இருந்தார், உடனே சில தினங்களுக்கு முன் அவர் நான் வெற்றி என்ற வார்த்தையை விட்டுவிட்டேன், யாரும் இதை சர்ச்சையாக்க வேண்டாம் என கூறினார்.
ஆனால், கலைப்புலி தாணு அவர்கள் வைரமுத்து மனதில் இருந்து தான் வார்த்தையாக வந்துள்ளது, அவர் படத்தை விமர்சிக்கலாம், அவரை நாங்கள் விமர்சிக்க ஏதும் இல்லை என கோபத்துடன் கூறியுள்ளனர்.