சந்தானம், கௌதம் மேனனா, இது என்ன புதுக்கதை?
தமிழ் சினிமாவில் காமெடியனாக அறிமுகமாகி தற்போது ஹீரோவாக வெற்றி பெற்றவர் சந்தானம். இவர் நடித்த தில்லுக்கு துட்டு ரூ 25 கோடி வரை வசூல் செய்துவிட்டது.
இந்நிலையில் இப்படத்தை தொடர்ந்து இவர் சர்வர் சுந்தரம், செல்வராகவன் இயக்கும் ஒரு படம் என வரிசையாக நடித்து வருகிறார்.
தற்போது வந்த தகவலின்படி அடுத்து கௌதம் மேனன் இயக்கும் ஒரு படத்திலும் சந்தானம் நடிப்பதாக முடிவெடுத்துள்ளாராம், இதுக்குறித்து விரைவில் தகவல் வருமாம்.