தீவிரவாதிகளை ஒடுக்க பிரான்ஸில் புதிய பாதுகாப்புப் படை
தீவிரவாத தாக்குதல்களிலிருந்து பொதுமக்களை காப்பாற்ற தேசிய பாதுகாப்பு படை ஒன்று உருவாக்கப்படும் என்பதை பிரஞ்சு அதிபர் பிரான்சுவா ஒல்லாந்து தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே தங்களிடம் உள்ள படையினரை கொண்டு இந்த புதிய படை ஆரம்பிக்கப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான நாடாளுமன்ற ஆலோசனைகள் செப்டம்பரில் தொடங்க உள்ளது.
போலிஸ் உதவிப் படைவீரருக்கு அதிக அளவிலான தன்னார்வலர்கள் சேரும்படி விடுக்கப்பட்ட கோரிக்கையை தொடர்ந்து அதிபரின் இந்த அறிவிப்பு வெளிவந்துள்ளது.
பிரஞ்சு புரட்சி தொடங்கிய போது, கடைசி பிரஞ்சு தேசிய பாதுகாப்பு படை குழு அமைக்கப்பட்டது.
1872ல் அது கலைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.