பர்தா அணிந்து படையினரை ஏமாற்றும் ஐ.எஸ் தீவிரவாதிகள்!
அரச படையினருக்கு ஈடுகொடுக்க முடியாமல் சிதறி ஓடும் ஐ.எஸ் தீவிரவாதிகள், தப்பிச் செல்ல வழி இல்லாது இஸ்லாமிய பெண்கள் அணியும், பர்தா ஆடை அணிந்து அரச படையினரை ஏமாற்றி வருவது தொடர்பான கணொளியொன்று தற்போது வெளியாகியுள்ளது.
கடந்த வாரம் சிரியாவின், லெபோ மாகாணத்தில் மேன்பிஜ் நகரில், சிரியா ஜனநாயக படைகள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த போது 3 இஸ்லாமிய பெண்கள் பர்தா அணிந்து நகருக்குள் நுழைய முயன்று உள்ளனர்.
ஆனால், இவர்களின் நடத்தையில், சந்தேகம் அடைந்த படையினர் அவர்களிடம் விசாரணை நடத்திய போது அவர்கள் அனைவரும் ஐ.எஸ் அமைப்பை சேர்ந்த ஆண்கள் என்பது தெரிவந்தது.
இதை தொடர்ந்து அவர்கள் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில், இவர்கள் கைது செய்யப்பட்ட போது பதிவு செய்யப்பட்ட கணொளி தற்போது இணையத்தில் வைரலாக பரவிவருகின்றது.