விரைவில் திருமணம் செய்யவிருக்கும் ஜெய்-அஞ்சலி- கோலிவுட்டில் பரபரப்பு
ஜெய் மற்றும் அஞ்சலி எங்கேயும் எப்போதும் படத்தில் இணைந்து நடித்தனர். இப்படத்தை தொடர்ந்து அடுத்து தற்போது பலூன் என்ற படத்தில் நடிக்கவுள்ளனர்.
இந்த படத்திற்கு பிறகு இவர்கள் இருவரும் உண்மையாகவே திருமணம் செய்துக்கொள்ள இருக்கிறார்களாம், இதை தமிழகத்தின் முன்னணி தொலைக்காட்சி ஒன்று தெரிவித்துள்ளது.
இந்த செய்தி கோலிவுட்டையே பரபரப்பிற்கு உள்ளாக்கியுள்ளது, பல முறை ஜெய், அஞ்சலி இருவருக்குமிடையே காதல் கிசுகிசு வந்தது குறிப்பிடத்தக்கது.