பிரான்சில் தாக்குதல் நடத்தியது இவர் தான்! தீவிரவாதியின் புகைப்படம் வெளியானது
பிரான்சின் வடக்கு பகுதியில் தேவாலயம் ஒன்றில் புகுந்து, ஐந்து பேரை பணையக்கைதிகளாக பிடித்து வைத்தது மட்டுமல்லாமல், மூத்த பாதிரியாரை படுகொலை செய்த ஐ.எஸ் தீவிரவாதி ஒருவரின் புகைப்படத்தை பொலிசார் வெளியிட்டுள்ளனர்.
புகைப்படத்தில் உள்ள, 19 வயதான Adel Kermiche தாக்குதலில் ஈடுப்பட்ட இரண்டு தீவிரவாதிகளில் ஒருவர் என பொலிசார் அடையாளம் கண்டுள்ளனர்.
மேலும், இவர் தான் பாதிரியாரை கொலை செய்வதற்கு முன்னர் மண்டியிடுமாறு மிரட்டியவர் என தெரியவந்துள்ளது.
Adel Kermiche, அமெரிக்கா உதவிப் பணியாளர் Peter Kassig மரணதண்டனை வீடியோவில் தோன்றிய பிரஞ்சு ஜிஹாதி Maxime Hauchardவின் அறியப்பட்ட நண்பர் என தெரியவந்துள்ளது.
இத்தாக்குதலுக்கு முன்னால் Adel Kermiche, Maxime Hauchardடை சந்தித்து இருக்கலாம் என பொலிசார் சந்தேகிக்கின்றனர்.
Adel Kermiche, முன்னதாக பிரான்ஸ் மற்றும் சுவிட்சர்லாந்தில் சிறை தண்டனை அனுபவித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், இவர் ஐ.எஸ் இயக்கத்தில் இணைய சிரியாவிற்கு பயணம் மேற்கொள்ள முயற்சி செய்ததை தொடர்ந்து, அதிகாரிகள் அவரை தொடர்ந்து கண்காணித்து வந்துள்ளனர்.
இந்நிலையில், சிறையிலிருந்து பிணையில் விடுதலையான Adel Kermiche, ஐ.எஸ் அமைப்பு ஆதரவுடன் பிரான்ஸ் தேவாலய தாக்குதலில் ஈடுப்பட்டதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.