மக்கள் எதிர்க்கும் அரசியல் அமைப்பை உருவாக்கப் போவதில்லை!- ஜனாதிபதி
மக்கள் எதிர்ப்புக்கு உள்ளாகும் அரசியல் அமைப்பொன்றை உருவாக்கப் போவதில்லை என்றுஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
அத்துடன் அனைத்து மக்களும் ஏற்றுக்கொள்ளும் வகையிலான அரசியல் அமைப்பேஉருவாக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கண்டி கெட்டம்பே பிரதேசத்தில் இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டுஉரையாற்றும் போதே அவர் இதனை குறிப்பிட்டார்.
மேலும் சிலர் புதிய அரசியலமைப்பு மூலம் 1972ம் ஆண்டு உட்புகுத்தப்பட்ட பௌத்தசமயம் தொடர்பான கொள்கைகள் அகற்றப்படும் எனக் கூறுவதாகவும், அது பொய்யான கருத்துஎன்றும் ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.
எனவே அரசியல் அமைப்பு உருவாக்கப்படுவது இருக்கின்ற பிரச்சினைகளை தீர்க்கவேஅன்றி புதிய பிரச்சினைகளை உருவாக்கவல்ல எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளமைசுட்டிக்காட்டத்தக்கது.