அமெரிக்க அதிபர் வேட்பாளராக ஹிலாரி கிளிண்டன்!- அதிகாரபூர்வமாக அறிவிப்பு!
அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளராக போட்டியிட, முன்னாள் அதிபர் கிளிண்டனின் மனைவி ஹிலாரி கிளிண்டன் தேர்வு செய்யப்பட்டு அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளார்.
அமெரிக்க அதிபர் ஒபாமாவின் பதவிக்காலம், இந்த ஆண்டுடன் முடிவடைகிறது. இதனையடுத்து புதிய அதிபரை தேர்ந்தெடுக்க, நவ., 8ம் தேதி தேர்தல் நடக்கிறது.
இதில் களம் காண உள்ள குடியரசு கட்சி மற்றும் ஜனநாயக கட்சி வேட்பாளர்களை தேர்வு செய்வதற்கான பிரைமரி தேர்தல்கள் பல்வேறு மாகாணங்களில் நடந்து வந்தன.
இதில் ஜனநாயக கட்சி வேட்பாளராக, முன்னாள் அதிபர் கிளிண்டனின் மனைவியும், முன்னாள் வெளியுறவு அமைச்சருமான ஹிலாரி கிளிண்டன் தேர்வு செய்யப்பட்டு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளார்.
முன்னதாக குடியரசு கட்சி சார்பில் டொனால்டு டிரம்ப் வேட்பாளராக அக்கட்சி சார்பில் அறிவிக்கப்பட்டு விட்டார்.
போட்டியிடும் இரு கட்சிகளும் தங்களது அதிபர் வேட்பாளரை அறிவித்துள்ளதையடுத்து, அமெரிக்க அதிபர் பதவியை கைபற்ற ஹிலாரி, டிரம்ப் இடையே கடும் போட்டி நிலவவுள்ளது.