பால் வாங்க சென்ற பெண்ணிற்கு அடித்த அதிஷ்டம்!.
கனடா-எட்மன்டனை சேர்ந்த பொகுமிலா முறொசுவாஸ்கி ஏப்ரல் மாதம் வீட்டில் பால் தீர்ந்து விட்டதால் பால் வாங்க Shopper’s Drug Mart சென்ற போது விரைவு தேர்வு ரிக்கெட் ஒன்றை வாங்கினார் ரிக்கெட்டை வாங்கியது அவரது திடீர் முடிவாகும்.அடிக்கடி வாங்கும் பழக்கமற்றவர்.
வெற்றி பெற்ற தனது ரிக்கெட்டை ஸ்கான் செய்த போதும் அவரது கண்களை அவரால் நம்பமுடியவில்லை. தனது கணவருடன் 20ற்கும் மேற்பட்ட தடவைகள் சரிபார்த்ததாக தெரிவித்தார்.
ஆச்சரியம், அவநம்பிக்கை, பயம் போன்ற உணர்வுகள் இவருக்கு ஏற்பட்டது. ஏப்ரல் மாதத்திய லொட்டோ 6/49 சீட்டிழுப்பில் இப்பெண் கிட்டத்தட்ட 21-மில்லியன் டொலர்களை வென்றுள்ளார்.
வெற்றிபெற்ற பின்னர் தனக்கு சில யோசனைகள் தோன்றியதாக கூறினார்.ஒரே இடத்தில் 26வருடங்கள் தொடர்ந்து பணியாற்றிய இவர் இளைப்பாற எண்ணியுள்ளார். இரண்டாவதாக குடும்பத்திற்கு உதவுதல்-புதிய வீடொன்றை வாங்குதல் மற்றும் பயணங்கள் மேற்கொள்ளுதல் என்பனவாகும்.