இப் பெண்ணிற்கு நீர் வீழ்ச்சிக்கு நடந்த துயரம்…??
அமெரிக்காவில் 41என்பிசி செய்தி தொலைக்காட்சி சேனலின் நிகழ்ச்சி தொகுப்பாளினி தனது 25வது பிறந்தநாளை கொண்டாட சென்ற இடத்தில் நீர்வீழ்ச்சியில் இருந்து விழுந்து பலியாகியுள்ளார். அமெரிக்காவின் ஜார்ஜியா மாநிலத்தில் உள்ள ஸ்டாக்பிரிட்ஜ் பகுதியை சேர்ந்தவர் டெய்லர் டெரல்(25). அவர் மேகன் நகரில் உள்ள 41என்பிசி செய்தி தொலைக்காட்சியில் நிகழ்ச்சி தொகுப்பாளினியாக பணியாற்றி வந்தார். அவரது 25வது பிறந்தநாளே அவருக்கு இறந்த நாள் ஆகிவிட்டது.
டெரல்
நீர்வீழ்ச்சியின் அடிப்பகுதியில் டெரலின் உடல் ஒதுங்கியதை வனத்துறையினர் கண்டுபிடித்தனர். கடந்த சனிக்கிழமை பிக்ஸா வனப்பகுதியில் உள்ள மற்றொரு நீர்வீழ்ச்சியில் இருந்து குதித்த ஆண் ஒருவர் பலியானார்.
டெரல்
நீர்வீழ்ச்சியின் அடிப்பகுதியில் டெரலின் உடல் ஒதுங்கியதை வனத்துறையினர் கண்டுபிடித்தனர். கடந்த சனிக்கிழமை பிக்ஸா வனப்பகுதியில் உள்ள மற்றொரு நீர்வீழ்ச்சியில் இருந்து குதித்த ஆண் ஒருவர் பலியானார்.
அதிர்ச்சி
பிறந்தநாளை சந்தோஷமாக கொண்டாட சென்ற இடத்தில் டெரல் பலியானது குறித்து அறிந்து அவருடன் பணியாற்றுவோர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
பணி
ஜார்ஜியா சதர்ன் பல்கலைக்கழகத்தில் படித்து முடித்த பிறகு 2013ம் ஆண்டு 41 என்பிசியில் இன்டர்னாக சேர்ந்தார் டெரல். முதலில் ரிப்போர்டராக இருந்த டெரல் பின்னர் நிகழ்ச்சி தொகுப்பாளியானார்.