ரிலீசுக்கு முன், பின் கபாலி செய்த 11 சாதனைகள் – ஸ்பெஷல்
ரஜினி கபாலி படத்தின் சாதனைகள் பிரம்மாண்டத்தின் உச்சம். ஒவ்வொரு நாளும் பல சாதனைகளில் இடம்பெறுகிறது. தற்போது படத்தின் ரிலீசுக்கு முன்பும், ரிலீசான பின்னரும் என்னென்ன சாதனைகளை படம் செய்திருக்கிறது என்ற சிறப்பு தொகுப்பு இதோ
1. இந்தியாவிலேயே அதிக முதல் நாள் வசூல்
கபாலி படம் வெளியான முதல் நாளில் மட்டும் சுமார் 50 கோடி ரூபாய்க்கும் மேல் வசூல் ஈட்டி, ஷாருக்கானின் ‘Happy New Year’ முதல் நாள் வசூல் சாதனையை முறியடித்தது.
2. சுல்தான் சாதனை முறியடிப்பு
இந்த வருடத்தின் அதிகபட்ச வசூல் ஈட்டிய படம் சல்மான் கானின் சுல்தான். இந்த படத்தின் முதல் நாள் வசூல் சாதனையை முறியடித்தது.
3. அதிகபட்ச தியேட்டர்களில் ரிலீஸ்
இந்தியாவில் மட்டும் சுமார் 4000 திரையரங்குகளில் இந்த படம் வெளியானது. வெளிநாடுகளிலும் சேர்த்து சுமார் 9000 தியேட்டர்களில் ரிலீஸானது.
4. அமெரிக்காவில் பாகுபலி சாதனை முறியடிப்பு
அமெரிக்காவில் பிரீமியர் காட்சிகளின் மூலம் சுமார் 2 மில்லியன் டாலர் வசூல் ஈட்டி, பாகுபலி சாதனையை முறியடித்தது.
5. கேரளா, கர்நாடகாவில் வசூல் சாதனை
கேரளா மற்றும் கர்நாடகாவில் அந்த மாநில மொழி படங்களை விட முதல் நாள் அதிக வசூல் ஈட்டியுள்ளது கபாலி. கேரளாவில் 4.2 கோடி மற்றும் கர்நாடகாவில் 5.1 கோடி வசூலித்தது.
6. மலாய் மொழியில் முதல் தமிழ் படம்
பல தமிழ் படங்கள் பிற மொழிகளில் டப் செய்யப்படுகிறது. இந்திய திரைப்படங்களில் கபாலி படம் மட்டும் தான் மலாய் மொழியில் டப் செய்யப்பட்டிருக்கிறது.
7. டிக்கெட் முன்பதிவில் செய்த சாதனை
இப்படத்தின் டிக்கெட் முன்பதிவை கண்டு அனைவரும் அதிர்ந்தனர். முன்பதிவு திறந்த ஒரு மணிநேரத்தில் ஒரு வாரத்திற்கான டிக்கெட்டுகள் புக்காகிவிட்டது.
8. உலகின் பெரிய திரையரங்கில் திரையிடப்பட்ட முதல் இந்திய படம்
பிரான்சில் இருக்கும் Le Grand Rex திரையரங்கில் திரையிடப்பட்ட முதல் இந்திய திரைப்படம்.
9.முதல் வாரத்தில் அதிக வசூல் பட்டியலில் 6வது இடம்
Star Trek, Tarzan, Ice Age, SkipTrace, The Secret Life Of Pets போன்ற ஹாலிவுட் திரைப்படங்கள் வரிசையில் அதிக வசூல் செய்த படம் என்ற பெருமையோடு 6வது இடத்தை பிடித்தது கபாலி.
10. விமானத்தில் விளம்பரம் செய்யப்பட்ட முதல் இந்திய படம்
ஏர்ஏசியாவுடன் கூட்டணி வைத்துக்கொண்ட கபாலி படத்திற்கு விமானத்தில் கபாலி படத்தை ஒட்டி விளம்பரம் செய்தனர். அதுமட்டுமில்லாது தங்க நாணயத்தில் கபாலி, ஏர்டெல்லில் கபாலி என பிரம்மிப்பூட்டும் புரொமோஷன்கள்.
11. இறுதியில் தன் சாதனை தானே முறியடித்த பெருமை
இதுவரை ரஜினி நடிப்பில் வெளியான படங்களின் வசூல் சாதனையை ரூ. 210 கோடி வசூல் செய்து தன் சாதனையை தானே முறியடித்திருக்கிறார் ரஜினி.