டவுண்ரவுனில் கத்திக்குத்து: பெண் ஒருவர் படுகாயம்
டவுண்ரவுனில் நேற்று முன் தினம் (வெள்ளிக்கிழமை) காலை இடம்பெற்ற கத்திக்குத்துச் சம்பவம் ஒன்றில் 20 வயதான பெண் ஒருவர் படுகாயம் அடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த பெண் கழுத்துப் பகுதியில் கத்திக்குத்துக்கு இலக்கான நிலையில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார் என தெரிவிக்கப்படுகிறது.
Esplanade இற்கு அருகில் Princess வீதிப்பகுதியில் டவுண்ரவுனில் அமைந்துள்ள வீடு ஒன்றின் வளவினுள் இந்த கத்திக்குத்துச் சம்பவம் இடம்பெற்றதாக கூறப்பட்டுள்ளது.
ஏதற்காக இவர் குத்தப்பட்டார், அவரது பெயர் வயது ஆகிய விபரங்களை வெளியிடாத பொலிஸார், இந்த சம்பவம் தொடர்பான விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.