சுவாதியை கொன்றது இரண்டு பேரா?
சுவாதி கொலையில் ராம்குமார் குற்றவாளி என்று பொலிசார் கூறி வரும் நிலையில், சுவாதி கொலையில் 2 பேர் சம்பந்தப்பட்டிருப்பதாக ராம்குமாரின் வழக்கறிஞர் ஒருவர் பரபரப்பு செய்தியை கூறியுள்ளார்.
ராம்குமாரின் வழக்கறிஞர் ஒருவர் அளித்துள்ள் பேட்டியில், சுவாதியை இரண்டு பேர் சேர்ந்து கொன்றதாக திடுக்கிடும் தகவலை கூறியுள்ளார்.
மேலும், அவர் கூறியதாவது தனக்கு ரிச்சி ஸ்ட்ரீட்டில் இருந்து ஒருவர் போன் செய்ததாகவும் அவர் சுவாதி கொலையை நேரில் பார்த்ததாக கூறியதாக தெரிவித்துள்ளார்.
கடந்த 24ம் தேதி சுவாதி ரயில் நிலையத்தில் அமர்ந்திருந்தார். அப்போது வந்த ஒருவர் சுவாதியின் தலைமுடியை பிடித்து அவரை நிமிர்த்து பிடித்ததாகவும், மற்றொருவர் சுவாதியை வெட்டியதாகவும் புது கதை ஒன்றை கூறியுள்ளார்.
பொலிசார் வெளியிட்டுள்ள தகவலில், சுவாதி கொலை வழக்கில் ராம்குமார்தான் குற்றவாளி என்பதற்கு போதுமான ஆதாரங்கள் உள்ளன.
நீதிமன்றம் கொடுத்த கால அவகாசத்திற்குள் தேவைப்படும் அளவுக்கு ஆதாரங்களைத் திரட்டிவிட்டோம். இன்னமும் விசாரணை முடியவில்லை. எனவேதான், மீண்டும் காவல் விசாரணைக்கு அனுமதி கோருகிறோம் என்றும் கூறியுள்ளனர்.