கனல் தெறிக்கும் நெடுஞ்சாலை 407ல் கோர விபத்து. மூவர் மரணம்.
கனடா-பிரம்ரனில் இடம்பெற்ற கனல் தெறிக்கும் வாகன மோதலில் மூவர் கொல்லப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.
இச்சம்பவம் நெடுஞ்சாலை 407 மேற்கு பாதை லேனில் மிசிசாகாவிற்கு அருகில் பிற்பகல் 3 மணியளவில் நடந்துள்ளது.
இருவர் சம்பவ இடத்திலேயே இறந்து விட்டதாகவும் மற்றொருவர் ஆபத்தான காயங்களுடன் காணப்பட்டதாகவும் சிறிது நேரத்தில் அவரும் இறந்து விட்டதாக அவசர மருத்துவ சேவையினர் தெரிவித்துள்ளனர்.
கோச் பேரூந்து ஒன்று மோதலில் சம்பந்தப்பட்டிருப்பதாக ஒன்ராறியோ மாகாண பொலிசர் தெரிவித்தனர்.ஆனால் உடனடியாக தெளிவாகவில்லை.
பல அம்புலன்ஸ்கள் மற்றும் தீயணைப்பு வாகனங்கள் நெடுஞ்சாலையில் காணப்பட்டன.நெடுஞ்சாலை ஓரத்தில் வாகனம் ஒன்று தீயணைப்பு வீரர்கள் அணைக்கும் வரைக்கும் எரிந்து கொண்டிருந்தது.
இறந்த மூவரும் இந்த வாகனத்தில் பயணித்தவர்கள் என நம்பபடுகின்றது.ஆனால் ஒன்ராறியோ மாகாண பொலிசர் விபரங்கள் எதனையும் உறுதிப்படுத்தவில்லை.
என்ன நடந்ததென அறியும் முயற்சியில் தடய அறிவியல் அதிகாரிகள் மற்றும் மோதல் புனரமைப்பு வல்லுநர்கள் ஈடுபட்டுள்ளனர்.
– See more at: http://www.canadamirror.com/canada/66558.html#sthash.30lB5PSt.dpuf