கனடா ஸ்காபுறோ நகரின் வரசித்தி விநாயகர் ஆலயத்தின் வருடாந்த இரதோற்சவத்தில் பல்லாயிரக்கணக்கான மக்கள் வெள்ளம்…
கனடா ஸ்காபுறோ நகரின் வரசித்தி விநாயகர் ஆலயத்தின் வருடாந்த இரதோற்சம் சனிக்கிழமை காலை தொடக்கம் பல ஆயிரக்கணக்கான அடியார்கள் புடை சூழ மிகவும் சிறப்பாக நடைபெற்றது
தேரில் விநாயகப் பெருமான் வீதி வலம் வந்த காட்சியை இந்துப் பெருமக்கள் அடியார்கள் மட்டுமல்லாது ரொரென்ரோ நகர மேயர் மற்றும், கனடிய மத்திய அரசின் குடிவரவு அமைச்சர், பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆகியோரும் வருகை தந்து வழிபட்டமை இ்ங்கு குறிப்பிடத்தக்கதாக்கும்
இந்த இரதோற்சவத்தின் ஆலயத்தின் பிரதம குரு சிவஸ்ரீ விஜயகுமாரக் குருக்கள் அவர்கள் தலைமை தாங்கி அனைத்து அபிசேகங்கள் மற்றும் கிரியைகள் அனைத்தையும் செவ்வனே நடத்திவைத்தம்மை குறிப்பிடத்தக்கதாகும்