கோத்தபாய விரைவில் கைதாவார்?
இலங்கையின் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தபாய ராஜபக்ச விரைவில் கைது செய்யப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுவதாக, குற்றப் புலனாய்வுப் பிரிவு வட்டாரங்களை மேற்கோள்காட்டி கொழும்பு ஆங்கில வார பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
குறிப்பாக இரண்டு மாதங்களுக்குள் கைது செய்யப்படுவார் என அந்தச் செய்திக்குறிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உயர்மட்டத்தில் இடம்பெற்ற சில குற்றச்செயல்கள் தொடர்பாக நடத்தப்படும் விசாரணைகளின் தொடர்ச்சியாகவே கோத்தபாய ராஜபக்ச கைது செய்யப்படுவார் என்றும் அந்த புலனாய்வுப் பிரிவு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
கோத்தபாய ராஜபக்ச கைது செய்யப்பட்டால், சிறைக்குச் செல்லும், ராஜபக்ச குடும்பத்தைச் சேர்ந்த நான்காவது நபராக அவர் இருப்பார்.
ஏற்கனவே ராஜபக்ச குடும்பத்தைச் சேர்ந்த பசில் ராஜபக்ச, யோசித ராஜபக்ச, நாமல் ராஜபக்ச ஆகிய மூவர் கைது செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.